Posts

கல்முனை பொது நூலகத்தில் வாசிப்பை நேசிக்கும் மழலைகளின் நிகழ்வுகள்

Image
கல்முனை பொது நூலகத்தில் சிறுவர்களுக்கான வாசிப்பை நேசிக்கும் மழலைகளின் நிகழ்வுகள் ================================================================ கல்முனை பொது நூலகம், தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, சிறுவர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை ஊட்டும் வகையில் பல்வேறுபட்ட நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது.   8-10-2024 அன்று நடைபெற்ற நிகழ்வில், சிறுவர்களுக்கு கதை கூறப்பட்டது. அவர்களும் தங்களுக்குப் பிடித்த திறமைகளை வெளிக்காட்டி மகிழ்ந்தனர். நூலகத்திற்கு தொடர்ந்து வந்து புத்தகங்களை படிக்கும்படி சிறுவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். மேலும் சிறுவர்களுக்கு பேப்பரை கொண்டு எளிய கைப்பணி பொருட்களை உருவாக்கும் முறையை செயல்விளக்கமாகக் காட்டப்பட்டது. இந்நிகழ்வு, மாநகர ஆணையாளா் என்.எம். நௌபீஸ் மற்றும் உதவி ஆணையாளர் ஏ. எஸ். எம். அசீம் ஆகியோரின் ஆலோசணைக்கு அமைவாக நூலகர் ஏ.எல்.எம்.முஸ்தாக் அவா்களின் தலைமையில் இடம்பெற்றது. கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச் ஜவுசி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பிரதம அதிதி மற்றும் நூலக ஊழியர்கள் அன்பளிப்புகள் மற்றும் இனிப்புகள் வழங...