சாய்ந்தமருது பொது நூலகத்தில் கோலாகலமாக நடைபெற்ற சிறுவர் தின மற்றும் வாசிப்பு மாத ஆரம்ப விழா
சாய்ந்தமருது பொது நூலகத்தில் கோலாகலமாக நடைபெற்ற சிறுவர் தின மற்றும் வாசிப்பு மாத ஆரம்ப விழா தேசிய சிறுவர் தினத்தை முன்னிட்டும், ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாகவும் விசேட சிறுவர் தினக் கொண்டாட்ட நிகழ்வொன்று நேற்று (ஒக்டோபர் 01) சாய்ந்தமருது பொது நூலகத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. "திடமான உள்ளங்கள்- வளமான சிறுவர்கள்" (Strong Minds - Enriched Children) எனும் உன்னத மகுட வாசகத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது, நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் அவர்களின் தலைமையில் இனிதே ஆரம்பமானது. கல்முனை மாநகர சபை ஆணையாளர் திரு. என்.எம். நெளபீஸ் அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக Dr. எம்.எம். ஜுமானா ஹசீம் அவர்களும், கௌரவ அதிதியாக நூலக வாசகர் வட்டச் செயலாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.எல். அன்சார் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அத்துடன் மல்ஹருஷ் ஷம்ஸ் முன்பள்ளிச் சிறுவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்...