Meet the Authors programme at Public Library - Sainthamaruthu.

 சாய்ந்தமருது பொது நூலகத்தில் "நூலாசிரியர்களைச் சந்திப்போம் - 02" நிகழ்வு.

சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஏற்பாட்டில், தேசிய வாசிப்பு மாத விசேட செயற்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "நூலாசிரியர்களைச் சந்திப்போம் - 02" இலக்கிய நிகழ்வு 23 ஓகஸ்ட் 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நூலக கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நூலகர் ஏ. எல். எம். முஸ்தாக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில், பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபூபக்கர் அவர்கள் சிறப்புரையற்றினார். சிரேஷ்ட எழுத்தாளர் ஏ. பீர் முஹம்மது நிகழ்வை வழிநடத்தினார்.
இவ்விழாவில் சாய்ந்தமருது பிரதேசத்தின் திறமைமிக்க மூன்று நூலாசிரியர்களின் நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டு, கலந்துரையாடல்களும் இடம்பெற்றன:
  1. அஷ்ஷெய்க் எஸ். எச். ஆதம்பாவா (மதனி) – "இஸ்லாமும் கவிதையும்"
  2. யூ.எல். ஆதம்பாவா – "கிராமத்து மண் வாசம்"
  3. ஏ. எல். அன்சார் – "மலரும் மொட்டுகள்"
இந்நிகழ்வில் விசேட அம்சமாக, சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் (C.D.O) என். எம். ஷாஹீர் அவர்களும் கலந்துகொண்டு, வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவம் பற்றிய விசேட உரையொன்றினை நிகழ்த்தியிருந்தார். மேலும், இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் நூலகர் ஏ. சி. அன்வர்சதாத் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
நூலாசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதையும், சமூகத்தினரிடையே திறந்த கலந்துரையாடல், இலக்கிய நயம் மற்றும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வில், பிரதேசத்தைச் சேர்ந்த இலக்கியவாதிகள், வாசகர்கள், கல்விமான்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுகளை இந் நூலகத்தில் கடைமயாற்றும் எம். எச். எம். இஸ்மாயில் (காரைதீவு பிரதேச சபை கெளரவ உப தவிசாளர்) அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கியதுடன், நிகழ்வின் நிறைவில் நூலக உதவியாளர் ஜனாப் ஏ.ஏ. எஸ். நபீத் அவர்களின் நன்றியுரையுடன் இந் நிகழ்வு இனிதே நிறைவுற்றது. 














































Popular posts from this blog

கிழக்கு மாகாண நூலகர் சேவைச் சங்கத்தின் ஆரம்பக் கூட்டம்

Online Examination for Grade 01 and 02