கல்முனை பொது நூலகத்தில் சிறுவர் தின விழாவும் வாசிப்புமாத ஆரம்ப நிகழ்வுகளும் கல்முனை பொது நூலகத்தில் சிறுவர் தின விழாவும், வாசிப்புமாத ஆரம்ப நிகழ்வும் 01.10.2024 அன்று ஆரம்பமானது. மாநகர ஆணையாளா் என்.எம். நௌபீஸ் மற்றும் உதவி ஆணையாளர் ஏ. எஸ். எம். அசீம் ஆகியோரின் ஆலோசணைக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வானது, நூலகர் ஏ.எல்.எம்.முஸ்தாக் அவா்களின் தலைமையில் இடம்பெற்றது. கல்முனை கல்வி வலையத்தில் அமைந்திருக்கும் விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். சிறுவர்களுக்கு நூலகத்தின் பல்வேறு பகுதிகள் பற்றி விளக்கிக் காட்டப்பட்டது. குறிப்பாக, சிறுவர் பகுதி, பத்திரிகைப் பகுதி மற்றும் உசாத்துணைப் பகுதி ஆகியவற்றைப் பற்றி விளக்கப்பட்டது. மேலும், சிறுவர்களுக்கு கதைகள் சொல்லப்பட்டு, நூலகத்தின் பயன்பாடு பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற சிறுவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது. இதில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியும், பல சுவாரஷ்ய நிகழ்வுகளில் ஈடுபட்டும் மகிழ்ந்தனர். நிகழ்ச்சி முடிவில், ...