"பாடசாலை நூலகங்களை வலுப்படுத்தும் செயற்றிட்டம்-2", நூல்கள் அன்பளிப்பு

சாய்ந்தமருதைச் சேர்ந்த ஓய்வுநிலை கல்வி அதிகாரியும் சிரேஷ்ட எழுத்தாளருமான ஏ. பீர் முகம்மது அவர்களின் கைவசமிருந்த பெறுமதிமிக்க நூல் தொகுதி ஒன்று, சாய்ந்தமருது பொது நூலக நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் அவர்களின் ஒருங்கிணைப்பில், சாய்ந்தமருது கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்திற்கு இன்று (2026.09.10) அன்பளிப்புச் செய்யப்பட்டது.

மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும், எதிர்வரும் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டும் சாய்ந்தமருது பொது நூலகத்தினால் இந்த விசேட வேலைத்திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்ந்நிகழ்வு அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் ஜனாப் கே.எல். ஜஃபர் அவர்களின் தலைமையில் பாடசாலை நூலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, கடந்த வருடம் சாய்ந்தமருது மழ்ஹருஷ் ஷம்ஸ் தேசிய பாடசாலைக்கும் எழுத்தாளர் ஏ. பீர் முகம்மது அவர்களினால் நூல் தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








 

Popular posts from this blog

கிழக்கு மாகாண நூலகர் சேவைச் சங்கத்தின் ஆரம்பக் கூட்டம்

Meet the Authors programme at Public Library - Sainthamaruthu.

Online Examination for Grade 01 and 02