நூலக போட்டியில் முதலிடம் பெற்றது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை
நூலக போட்டியில் முதலிடம் பெற்றது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை
இலங்கை நூலக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய ரீதியிலான பாடசாலை சிறந்த செயற்பாட்டு நூலக போட்டி நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 38 பாடசாலைகளில் இறுதிச்சுற்றில் தெரிவாகிய ஒரேயொரு தமிழ் மொழி மூலமான பாடசாலை எனும் பெருமையுடன் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்தது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை நூலகம். இதற்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 27/06/2025 அன்று கண்டியில் இடம்பெற்றது. இதன்போது இந்நிகழ்வுக்கு கல்லூரி அதிபர் A.L. நஸீபா இக்பால் (SLPS), அவர்கள் நேரடியாக அழைக்கப்பட்டு பாடசாலை சார்பான கௌரவிப்பினையும் சான்றிதழினையும் நினைவுச் சின்னத்தினையும் பெற்றுக் கொண்டார்.
மற்றும் சிறந்த பாடசாலை செயற்பாட்டு நூலக போட்டியில் சிறந்த நூலகச் செயற்பாட்டாளருக்கான சான்றிதழினை A.L. றினோஸ் (பட்டய நூலகர்) அவா்கள் பெற்றுக் கொண்டார்கள்.
மேலும் இவ்வரலாற்று நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக 02/07/2025 அன்று பாடசாலை காலை ஆராதனை நிகழ்வின் போது நூலக குழுவினர் அதிபரினால் கௌரவிக்கப்பட்டார்கள். இதன்போது பிரதி அதிபர் MA. ஸலாகுதீன் SLPS அவர்கள் உட்பட நூலக குழுவினரும் கலந்து கொண்டனர்.
இவ்வெற்றிக்காக கனிஷமான பங்காற்றிய முன்னாள் அதிபர் AH. பௌஸ்-SLEAS அவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய நூலக ஆசிரியர் றமீஸ் மற்றும் நூலக உதவியாளர்களான J.றமீஸ், றியாஸ், றபீக் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளுடன் கௌரவிக்கப்பட்டனர்.