சாய்ந்தமருது பொது நூலகத்திற்கு சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் விஜயம்
அண்மையில் மாளிகைக்காடு கமு/கமு சபீனா முஸ்லிம் வித்தியாலய - ஆரம்பப்பிரிவு மாணவர்கள், தங்களது ஆசிரியர்களுடன் சாய்ந்தமருது பொது நூலகத்திற்கு கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது நூலகப் பொறுப்பாளர் A.L.M. முஸ்தாக் மற்றும் நூலக ஊழியர்கள் இணைந்து, நூலகத்தின் சேவைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து விளக்கியிருந்தனர். அத்துடன், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் A. சஹரூன், வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்ததுடன், திரு. R.M. ஹஸன் மற்றும் அவரது குழுவினர் மாணவர்களுக்கான குழுச் செயற்பாடுகளையும் நடாத்தினர்.
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
